’புஷ்பா 2’ வெளியீடு தள்ளிவைப்பு?

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

’புஷ்பா’ படத்தின் தொடர்ச்சியாக, ‘புஷ்பா 2’ உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் பாசில், அனுஷா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து மொழிகளிலும் ‘புஷ்பா 2’ வெளியாக இருந்தது. இதனை முன்வைத்து அனைத்து மொழிகளிலும் விநியோகஸ்தர்களிடம் இருந்து முன்பணம் பெற்றிருந்தது மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், அனைத்து மொழிகளிலும் அதே தேதியில் வேறு எந்தவொரு படமும் வெளியிட திட்டமிடாமல் இருந்தார்கள்.

தற்போது, ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவடையவில்லை. இதனால் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனை முன்வைத்து அனைத்து மொழிகளும் பல்வேறு படங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடு என்று அறிவித்து வருகிறார்கள்.

Read Previous

செம குஷியில் சுந்தர்.சி: பின்னணி என்ன?

Read Next

அடுத்த இயக்குநர் யார்? – குழப்பத்தில் சூரி