‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட சர்ச்சைக்கு புதுவிதமாக முற்றுப்புள்ளி ஒன்றை வைத்திருக்கிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதே சமயத்தில் பொங்கல் அன்று சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையும் உருவானது.
பெரியாரை அவமதிக்கும் வகையில் வசனம் இடம்பெற்றிருக்கிறது என்று சர்ச்சை எழுந்தது. அதே வேளையில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதுவும் பெரும் பேச்சுப் பொருளாக உருவானது.
பெரியாரை அவமதிக்கும் வகையில் வசனம் இடம்பெற்றிருக்கும் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இது என்ன புதுசா இருக்கே என்று பலரும் ஆச்சர்யத்துடன் இருக்கிறார்கள். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களையே ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிடும்.
இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பெயரை மட்டும் மாற்றி போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள்.