ராஜமெளலி – மகேஷ் பாபு படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ராஜமெளலி. இந்தியாவில் இருந்து அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக உலகளாவிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணிபுரியவுள்ளனர்.
தற்போது தான் இந்தப் படத்தின் முழுமையான திரைக்கதை வடிவத்தினை முடித்துள்ளார் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இந்தக் கதைக்கு ஏற்ற நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கவுள்ளது.
இதில் நாயகியாக நடிக்க இந்தோனேசியா நடிகை செல்சி எலிசெபத் இஸ்லானிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக ஜெர்மினி நாட்டிற்கு சென்றுள்ளார் மகேஷ் பாபு. தனது உடலமைப்பை மாற்றி அமைத்துள்ள மகேஷ் பாபு, இந்தப் படத்துக்காக பல்வேறு பயிற்சிகளையும் கற்றுக் கொண்டு வருகிறார்.
சுமார் 2000 கோடி ரூபாய் பொருட்செலவில் 2 பாகங்களாக இந்தப் படம் உருவாகவுள்ளது.