மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க புதிய படமொன்று உருவாக இருக்கிறது.

’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தினை இயக்கி வருகிறார். 

மேலும், ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக ‘வாழை’ படத்தினையும் இயக்கி முடித்துள்ளார்.துருவ் விக்ரம் படத்துக்குப் பிறகு, மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். 

இந்தப் படத்தினை தனுஷே தயாரிக்கவும் இருக்கிறார். இதனிடையே, தற்போது இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் படத்துக்கு முன்பாக ரஜினி நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். ‘மாமன்னன்’ படத்தினை பார்த்துவிட்டு, மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டியிருந்தார் ரஜினி. 

அப்போதே இருவரும் இணைந்து படம் பண்ண வாய்ப்பு அதிகம் என்ற திரையுலக வட்டாரத்தில் செய்திகள் அடிபட்டது.தற்போது ரஜினிகாந்த் – மாரி செல்வராஜ் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. 

மாரி செல்வராஜ் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு உடனே தொடங்க ரஜினி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

ஜன.18-ல் தொடங்குகிறது ‘தக் லைப்’ படப்பிடிப்பு

Read Next

கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால்