கமல் நடிக்கும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்குகிறது.
’பொன்னியின் செல்வன்’ படங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘தக் லைப்’. இதில் நாயகனாக கமல் நடிக்கவுள்ளார்.
‘நாயகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் – கமல் இணைந்து பணிபுரிய படம் ‘தக் லைஃப்’ என்பது நினைவுக் கூரத்தக்கது.
மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.கே.எஃப்.ஐ மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன.
தற்போது சென்னையில் ஜனவரி 18-ம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது.இதற்காக தனியார் கல்லூரி ஒன்றில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், கெளதம் கார்த்திக், அபிராமி உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.