கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் படம்

‘காசேதான் கடவுளடா, த கிரேட் இந்தியன் கிச்சன்’ படங்களை இயக்கி முடித்திருக்கும் கண்ணன் தனது அடுத்த படத்தை இன்று ஆரம்பித்துவிட்டார்.

ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மெட்ரோ சிரிஷ், பிரிகிடா, தலைவாசல் விஜய், பவன், மயில்சாமி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

எமோஷனல் ஹாரர், காமெடி திரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தை இயக்குனர் கண்ணன் தனது மசாலா பிகிஸ் பேனரில் 10வது தயாரிப்பாகத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் கதைக் கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுத, தயாரிப்பாளர் தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக சுவாரசியமாக எழுதியதோடு வசனத்தையும் எழுதியுள்ளாராம். தொல்காப்பியன், தனஞ்செயன், பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ் ஆறு மாதங்களாக திரைக்கதையை ஆலோசித்து ‘பைண்ட் ஸ்கிரிப்ட்’டை இயக்குனர் கண்ணனிடம் கொடுத்துள்ளனர்.

இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. 

Read Previous

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

Read Next

தமிழ்நாட்டில் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் சிரஞ்சீவியின் ‘காட் பாதர்’