சத்யஜோதி ஃபிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், எஆர்கே சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
'சிவக்குமாரின் சபதம், அன்பறிவு' ஆகிய படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், ஹிப்ஹாப் தமிழா மீண்டும் இணைந்துள்ள படம் இது.
பேன்டஸி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மற்றும் போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளது. டீசர், டிரைலர், வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட உள்ளார்கள்.