ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66வது படம் இன்று சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் ‘தளபதி 66’ என இப்படத்தைக் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்.
இந்தப் படத்தின் கதையை வம்சி பைடிப்பள்ளியுடன் ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் இணைந்து எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.
இணை தயாரிப்பாளர்களாக ஸ்ரீ ஹர்ஷிதி ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்சிதா ஆகியோர் பொறுப்பு வகிக்க, சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி இருவரும் தயாரிப்பு மேற்பார்வையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் நேரடியாகத் தயாராக உள்ளது.