ஏப்ரல் 21 ஓடிடியில் வெளியாகும் ‘ஓ மை டாக்’

2 டி என்டர்டெயின்மென்ட், ஆர்பி டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, சரோவ் ஷண்முகம் இயக்கத்தில் அருண்குமார், அர்னவ் விஜய், விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ மை டாக்’.

தாத்தா விஜயகுமார், அப்பா அருண்குமார், பேரன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் சேர்ந்து இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கில் 240 நாடுகளில் இப்படத்தைப் பார்க்கலாம்.

அர்னவ் மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உணர்வு பூர்வமான உள்ளத்தைத் தொடும் கதை இது.  

ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும், செல்லப் பிராணிகளை விரும்புபவர்களும் இந்தப் படத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்  பார்த்து மகிழவேண்டிய  படம்.  எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு,  தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில், சூர்யா, ஜோதிகா தயாரிக்க ஆர்பி டாக்கீஸ் சார்பில் எஸ்ஆர் ரமேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Read Previous

விஜய் 66 – சென்னையில் கோலாகல ஆரம்பம்

Read Next

இளையராஜா இசையில் 70களில் நடக்கும் கதை ‘உலகம்மை’