விஷால் நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால் நடிக்கும் 31வது படம் ‘வீரமே வாகை சூடும்’.

இன்று விஷாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் கதாநாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். ஹைதராபாத்தில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

தெலுங்கில் ‘சாமான்யுடு’ என்ற பெயரில் படத்தை வெளியிட உள்ளார்கள்.

Read Previous

ஹாலிவுட்டில் தன் மகன்களை இயக்கும் சுஜா ரகுராம்

Read Next

அனபெல் சேதுபதி – டிரைலர்