7 தேசிய திரைப்பட விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா

2019ம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை கடந்த ஆண்டே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு கொரானோ தாக்கத்தின் காரணமாக விருதுகள் அறிவிப்பை தள்ளி வைத்தார்கள். இன்று மாலை அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த படம் (தமிழ்) – அசுரன்

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால் (கேடி என்கிற கருப்புதுரை)

சிறந்த பாடல் இசையமைப்பாளர் – இமான் (விஸ்வாசம்)

சிறந்த படம் சிறப்பு மென்ஷன் – ஒத்த செருப்பு சைஸ் 7,

சிறந்த ஆடியோகிராபி – பைனல் மிக்ஸ்ட் டிராக் – ரசூல் பூக்குட்டி – ஒத்த செருப்பு சைஸ் 7 

நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொள்கிறார்.  2010ம் ஆண்டு முதல் முறை வென்ற போதும் மலையாள நடிகர் சலீம்குமாருடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சிறந்த பிராந்திய மொழி தமிழ்ப் படத்திற்கான விருது வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்திற்குக் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் பெறும் தேசிய விருது இது. இதற்கு முன்பு ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதைக்கான விருதுகளையும், ‘காக்கா முட்டை’ படத்திற்காக  சிறந்த குழந்தைகளுக்கான படத்தையும் (தயாரிப்பாளர்), ‘விசாரணை’ படத்திற்காக சிறந்த பிராந்திய மொழி தமிழ்த் திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளார். 

விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் இமான், நாக விஷால் முதல் முறையாக தேசிய விருதைப் பெறுகிறார்கள்.

நடிகர் பார்த்திபன் இயக்கிய ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ‘புதிய பாதை (1989)’ படத்திற்காக சிறந்த பிராந்திய மொழி தமிழ்ப் படத்திற்கான விருது, ‘ஹவுஸ்புல் (1999)’ படத்திற்காக சிறந்த பிராந்திய மொழி தமிழ்ப் படத்திற்கான விருது, ஆகியவற்றை இதற்கு முன் பார்த்திபன் வென்றுள்ளார். இந்த முறை தேசிய அளவில் சிறப்பு மென்ஷன் விருதாக ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்குக் கிடைத்துள்ளது.

சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதை இரண்டாவது முறை பெறுகிறார் ரசூல் பூக்குட்டி. இதற்கு முன்பு ‘பழசிராஜா (மலையாளம் – 2009)’ படத்திற்காக சிறந்த ஆடியோகிராபி – சவுண்ட் டிசைனர் விருதைப் பெற்றுள்ளார்.

தமிழில் தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு நமது வாழ்த்துகள்.

Read Previous

மார்ச் 22ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

828 நாட்களுக்குப் பிறகு என் படம் வருகிறது – விஷ்ணு விஷால்

Most Popular