அருண் விஜய்யின் 31வது படப்பிடிப்பு நிறைவு

‘குற்றம் 23' படத்திற்கு பிறகு அருண் விஜய் நாயகனாக நடிக்கும் 31வது படத்தை இயக்கி வருகிறார் அறிவழகன். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

அதிக பொருட்செலவில் தயாராகும் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் ரெஜினா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் பகவதி ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இத் திரைப்படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் பிரம்மாண்டமாக நடந்தது.  சுமார் 3000த்துக்கும் மேலான துணை நடிகர்களுடன் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. 

நாயகன், நாயகி உட்பட 3000 பேருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படத்தில் தயாரிப்பாளருக்காக கொரோனாவை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை முடித்து தந்துள்ளாராம் அருண் விஜய்.

"எப்போதுமே  சினிமா ஒரு கூட்டு முயற்சிதான். இந்த இக்கட்டான  சூழலில் இப்படத்தை முடிப்பதில் எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குநர், நாயகி ரெஜினா மற்ற படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. அறிவழகனின் படங்களில் அடுத்தக்கட்ட படமாக இப்படம் இருக்கும். இந்த தைத் திருநாள் நம் தமிழ் சினிமாவுக்கு புது பாய்ச்சலை தரும் என நம்புகிறேன்," எனக் கூறியுள்ளார் அருண் விஜய்.

Read Previous

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’

Read Next

ரஜினிகாந்த்தின் பணிவான வேண்டுகோள், ரசிகர்கள் ஏற்பார்களா ?