விஜய் டிவியில் 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.
கடந்த மூன்று சீசன்களும் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால், இந்த வருடம் ஆரம்பமாக வேண்டிய நான்காவது சீசன் கொரானோ தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நடக்குமா, நடக்காதா என்ற ஒரு சூழல் நிலவியது.
டிவி நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், தொடர்கள் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எனவே, பிக் பாஸ் சீசன் 4-ஐயும் ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கினர். அக்டோபர் மாதம் இந்நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல்ஹாசனின் வீடியோ புரோமோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர்.
அடுத்தடுத்து நிகழ்ச்சி பற்றிய பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.