சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரிக்க நரேஷ் சம்பத் இயக்கியுள்ள படம் ‘ராஜ பீமா’.
ஆரவ், அஷிமா நர்வால் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், K S ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் நரேஷ் சம்பத் கூறுகையில்,
“விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த கொடிய நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம். தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
ராஜ பீமா படத்திற்கு சைமன் K கிங் இசையமைக்க, SR சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார்.