‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற "ஆர்டிக்கல் 15" படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் வழங்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ளார். ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மற்ற நடிக, நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் ராகுல் கூறுகையில்,

‘ஆர்டிக்கல் 15" படம் வெளி வந்த உடனேயே அதன் தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கி விட்டார்.  பல்வேறு வருடங்களாக  தயாரிப்பு, விநியோகம் என்று பல்வேறு துறைகளில் பல வெற்றி படங்கள் மூலம் தடம் பதித்த எனக்கு இப்பொழுது தயாரிப்பாளராகும் அந்தஸ்தை அவர் உருவாக்கித் தந்து உள்ளார். இதற்காக அவருக்கு வாழ் நாள் முழுதும் கடமைப்பட்டு இருக்கிறேன்.  

நான் திரைத்துறைக்கு வந்து பணியாற்றிய முதல் நிறுவனம் உதயநிதி சாரின் ரெட்  ஜெயண்ட்  நிறுவனம்தான். இன்று அவரை வைத்து படம் தயாரிக்கும் அளவிற்கு என்னை வளர்த்து ஆளாக்கி விட்ட உதயநிதி சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  

இந்தக் கதை தான் என்று முடுவெடுத்த பின்னர் இயக்குனராக எங்கள் முதல் தேர்வு இயக்குனர் அருண்ராஜா காமராஜா தான். சமூக அவலங்களை தோலுறுத்திக் காட்டும் இந்தப் படத்தை  இயக்க உணர்ச்சிப் பிழம்பாக காட்சி அமைக்கும் அருண் ராஜாவை விட வேறு யார் சிறப்பாக செய்து விட முடியும். அவரை இயக்குனராக ஒப்பந்தம் செய்து உடனே நாயகன் குறித்த விவாதத்தில் எங்கள் அனைவருடைய ஒருமித்தக்  கருத்தும் உதய் சார்தான் இதற்கு பொருத்தமானவர் என்று இருந்தது.

இதற்காக அவரை அணுகியவுடன் தன்னுடைய இடை விடாத  அரசியல்  மற்றும் சமுதாயக் களப் பணிகளின் இடையே  இந்தப் படத்தை செய்ய ஒப்புக் கொண்டார்.

இந்த படத்தின் நாயகனின் கதாபாத்திர அம்சம் உதயநிதி சாருக்கு  கச்சிதமாகப் பொருந்தும் என்பது அனைவரின் நம்பிக்கை.  அனைவரின் கவனத்தை ஈர்க்க  உள்ள இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின்  ஒவ்வொரு அறிவிப்பும் பிரம்மாண்டமாக இருக்கும். விரைவில் படப்பிடிப்பு குறித்த தகவல்களும் வெளி ஆகும்," என்கிறார் ராகுல்.

Read Previous

இறுதிக்கட்டப் பணிகளில் ‘ராஜ பீமா’

Read Next

ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் ‘பூமிகா’