ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கத்தில், பிரித்வி சந்திரசேகர் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதுன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பூமிகா’.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25 வது திரைப்படம் ஆகும்.
“இது வேதளாம் சொல்லும் கதை” படத்தை இயக்கி முடித்துள்ள ரதீந்தரன் R ப்ரசாத் எழுத்து, இயக்கத்தில் அடுத்த படமாக உருவாக உள்ள படம் ‘பூமிகா’.
படம் குறித்து இயக்குநர் ரதீந்தரன் R ப்ரசாத் கூறியதாவது,
“டெக்னிகலாக இது திரைக்கு வரும் எனது முதல் திரைப்படம். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
இப்படம் தொடர் படப்பிடிப்பில் ஒரேகட்டமாக 35 நாட்களில் நீலகிரி மலைப்பகுதிகள் மற்றும் தனியான காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. காடுகளில் கடும் சிக்கல்ளுடன், கடும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில் படமாக்கப்பட்டாலும், படக்குழுவின் அற்புதமான ஒத்துழைப்பால் வெகு விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் தவிர இப்படத்தில் நிறைய புது முகங்கள் நடித்துள்ளனர். கடும் இன்னல்களுக்கிடையே பெரும் ஒத்துழைப்பு தந்த படக்குழுவிற்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
மேலும் இப்படத்தில் பிரமிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்திய இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara)வுக்கு தனித்த முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் ப்ரித்வி சந்திரசேகரின் இசை கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரியை அளவில் பாராட்டுக்களைப் பெறும். படக்குழு வெளியிட்ட மோஷன் டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியிடப்படும்,” என்றார்.