சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடித்த படம் ‘பொன்மகள் வந்தாள்’.
இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தில் வெண்பா என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். பல நீளமான தமிழ் வசங்களை உணர்வுபுர்வமாக பேசி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக ரசனையாகப் பதிவிடும் பார்த்திபன் அதேப்போல் ஜோதிகா பாராட்டியுள்ளார்.
அந்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"நீர்… பாத்திரத்துடன் ஒன்றி அப்பாத்திரத்தின் வடிவத்தை அடைவதைப் போல்…
நீர் இப்படத்தில் பாத்திரமாகவே அதுவும் பத்திரமாகவே (கொஞ்சம் நழுவினாலும் உடையக்கூடிய கண்ணாடிப் பாத்திரம்). Reality show-வில் பாதிக்கப்பட்ட பெண்ணையே அழைத்து வந்து அவர் வலியிலிருந்து வலிமைக்குள் நுழைந்த பகீரத தருணங்களை விளக்கும் போது, இனம் புரியாத விசும்பல் நமக்குள் வெடிக்கும்.
அப்படி படம் நெடுக! தன் அகன்ற விழிகளால் ஆடியன்ஸை ஆக்கிரமிக்கும் அக்கிரமம். அதுவும் Maximum சின்ன முள், பெரிய முள் மற்றும் நடு முள் இத்தனை முட்களுக்கு நடுவே தான் நேரம் பூப் பூவாய் வாசம் வீசுவதை போல… மிக சாதூர்யமாக, சாத்வீகமாக, சவாலான ஒரு கேஸை Lawவகமாகக் கையாண்டு… கண்ணீர் ஆறுகளுக்கு நடுவே பன்னீர் புஷ்பம் பூப்பதைப் போல உங்கள் கன்னக்குழியினில் ஒரு மெளனப் புன்னகை.
அசோக PILLAR மீது 4,5 சிங்கங்கள் போல படத்தில் சிலர் நடித்-இருந்தாலும் நீங்கள் மட்டுமே அந்த PILLAR.. தில்'லர்!'
அந்த சட்டப் புத்தகத்தில் 1000 பக்கங்கள் இருந்தாலும்,
அந்த சட்டமாகவே நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
அந்த சுத்தியல் கூட, உங்கள் உணர்ச்சிக்கு முன்னால் யார் நடித்தாலும் 'SILENCE'
என அதட்டுகிறது.
நீதி தேவதைக் கூட ஓரக்கண்ணால் உங்கள் நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள். அவளைப் போலவே
நானும் உங்களின் துல்லியமான உணர்ச்சி வெளியீட்டை உணர்ச்சிவசப்பட்டே பார்த்துக் கொண்டடிருந்ததில் நானே என் வசப்படாமல் போனேன்-போலானேன். ஏன்?
நடிகர் திலகம், நடிகையர் திலகம், நடிப்பின் இலக்கணம் இப்படி இன்னும் சில பல இருப்பினும். அவை அனைத்தையும் உருக்கி ஒரு பொன் கேடயமாக்கி ..கதா பாத்திரமாகவே சதா க்ஷனமும் வாழ்ந்திருக்கும் எங்கள் ஜோ.வுக்கு 'ஜே ஜே' சொல்லி வழங்கலாம்.வாழ்த்தலாம் । படத்தை வெளியிட்ட OTT – Amazon ஆக இருக்கலாம்,
நடிப்பை வெளியிட்ட Jyotika – Amazing in
Oppatra (ஒப்பற்ற)
Thaniththuvamaana (தனித்துவமான)
Thiramai (திறமை)".