விஜய் டிவியில் அந்தக் காலத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி ‘லொள்ளு சபா’.
திரைக்கு வந்த படங்களை கிண்டலடித்து ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து இன்று நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் அறிமுகமானவர்தான். இப்போதைய முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு கூட அந்த நிகழ்ச்சியில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்.
அந்நிகழ்ச்சியை எழுதி, இயக்கிய ராம்பாலா, சந்தானம் கதாநாயகனாக நடித்து ‘தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2’ ஆகிய படங்களை இயக்கியவர்.
அந்நிகழ்ச்சியை தற்போது கொரானோ ஊரடங்கு நேரத்தில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்கிறார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது