‘100’ஐத் தாண்டிய 2012

     வருடத்துக்கு வருடம் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவருவதின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இந்த 2012 ம் ஆண்டில் இதுவரை வந்த படங்களின் எண்ணிக்கை நேற்று வெளிவந்த சுந்தரபாண்டியன், நெல்லை சந்திப்பு படங்களோடு 100ஐத் தாண்டி விட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஏறக்குறைய 120 படங்களுக்கு மேலும், 2010ம் ஆண்டு 130க்கு மேற்பட்ட படங்களும் வந்த நிலையில் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் மத்தியிலேயே 100ஐத் தாண்டியது பெரிய விஷயமாகவே கருதப்படுகிறது. இந்த ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் இந்த வருடம் 150 படங்களைத் தொடும் வாய்ப்பு உள்ளது.

1980களிலும் 1990களின் முதல் சில வருடங்களிலுமே சராசரியாக 150 படங்கள் வெளிவந்துள்ளன. இது ஆரோக்கியமான சூழ்நிலைதான் என்றாலும், வெளிவரும் படங்களின் வெற்றி விகிதம் என்னவோ மிகவும் குறைவாகவே உள்ளது.

Read Previous

சுந்தரபாண்டியன் – விமர்சனம்

Read Next

ஓவியாவுடன் இனி நடிக்க மாட்டேன் – விமல்