ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறி விட்ட ஹன்சிகா தற்போது சேட்டை, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஹரி இயக்கத்தில், சூர்யா ஜோடியாக, ஹன்சிகா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஸ்கூலுக்குப் போகும் பள்ளி மாணவியாகவும் நடிக்கிறார் ஹன்சிகா. பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், மீண்டும் பள்ளிக்கே சென்று படிக்கலாம் போலிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் ஹன்சிகா.
நீங்க படிக்கப் போயிட்டீங்கன்னா ‘பப்ளியான’ ஹீரோயினுக்கு நாங்க எங்ப போறது ஹன்சிகா ?