தமிழ்த் திரையுலகிற்கு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மையானவர் கமல்ஹாசன். அவரது இயக்கம், நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ‘ஆரா 3டி ’ என்ற ஒலிப்பதிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்.
‘ஆரா 3டி’ தொழில் நுட்பத்தை உலகத்திலேயே இரண்டாவதாகவும், ஆசியாவிலேயே முதலாவதாகவும் அறிமுகப்படுத்தும் பெருமை கமல்ஹாசனைச் சாரும்.
‘ஜார்ஜ் லூகாஸ்’ என்பவர்தான் இந்த தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர்.
இந்த ‘ஆரா 3டி’ தொழில் நுட்பம் சென்னை , சத்யம் திரையரங்கில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துடன் , ‘விஸ்வரூபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது.
தமிழ்த் திரைப்பட தொழில்நுட்ப மாற்றத்தில் இன்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பம்…