ஜெய்க்கு ஜோடியாக மும்பை நாயகி

இயக்குனர் கௌதம்   மேனனின்  ஃபோட்டோன் கதாஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படத்திற்கான கதாநாயகி தேர்வு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது .

முதலில் அனன்யா   கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டாலும் , தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் தயாரிக்கப்படுவதால் இப்படத்தில் அவருக்கு பொருத்தமான வேடம் இருக்காது என்று கருதி வேறு ஒரு  கதாநாயகியை தேடினர் படக் குழுவினர் .

இவர் பொருத்தமானவரா, அவர் பொருத்தமானவரா என்ற தேடல் இன்று முடிவுக்கு வந்தது. ஜெய்க்கு ஜோடியாக  பிரபல ஹிந்தி நடிகை யாமி கௌதம் நாயகியாக நடிக்க உள்ளார் . இப்படத்தில்  அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் பிரேம் சாய் முன்னரே திட்டமிட்டாலும் அவரது கால்ஷீட் கிடைக்காததால் அது முடியாமல் போனது.

சில  காரணங்களால் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தள்ளிப் போனதால் யாமி கௌதம் அவராகவே இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த இயக்குனரும் உடனே  இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுவிட்டார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

பின்னணி பாடகர் கார்த்திக்  இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் , ராஜீவன் கலை வண்ணத்தில் , திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை படமாக்க ,பிருந்தாநடனம் அமைக்கின்றனர்.

ஜெய் – யாமி கௌதம் ஜோடியுடன்  சந்தானம் , விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கும்   இப்படம், காதல்  நகைச்சுவை, இனிய இசை என்ற கலவையுடன் தயாராகிறது .

Read Previous

‘ருத்ரமாதேவி’ அனுஷ்கா

Read Next

ஆந்திரா, கேரளாவிலும் ‘துப்பாக்கி’ ஆர்வம்