‘கேடி’ படம் மூலம் 2006ல் தமிழுக்கு அறிமுகமானவர் தமன்னா. அதன் பின் 2007ல் வெளிவந்த ‘கல்லூரி’ திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின், படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சுறா, சிறுத்தை, உட்பட பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் பாடல்களில் அவருடைய நடனம் கொஞ்சம் சுமாராகவே இருக்கும். ‘பையா’ படத்தின் ‘அடடா மழைடா…’ பாடல் மட்டுமே ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்த ஒன்று.
கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக தெலுங்குப் படங்களில் நடித்ததால், தற்போது, தன்னுடைய நடனத் திறமை வளர்ந்து விட்டது என தமன்னா தெரிவித்துள்ளார்.
அடுத்து அஜித் ஜோடியாக அவர் நடிக்கப் போகும் படத்தில் அட்டகாசமான நடனத்தை எதிர்பார்க்கலாம்.