‘மைனா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘உ’.
திரைப்படக் கல்லூரியில் இயக்கம் படித்த ஆஷிக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பல குறும்படங்களை இயக்கி இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விருதுகளை பெற்றவர் ஆஷிக்.
வருண், மதன் கோபால், ஸ்மைல் செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சௌந்தரராஜா, காளி, ராஜசிவா, தீப்ஸ், சூப்பர் சிங்கர் ஜுனியர் வின்னர் ஆதீஷ், மதுமிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அபிஜித் ராமசுவாமி இசையில் முருகன் மந்திரம் பாடல்களை எழுதுகிறார்.
படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.