பொங்கலுக்கு ஒரு சில படங்களே வந்தாலும், அதன் பின் வரிசையாக பல படங்கள் வருகின்றது என்ற தகவலை ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இப்போது அதில் மேலும் ஒன்றாக ‘சென்னையில் ஒரு நாள்’ படமும் இணைகிறது.
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘டிராஃபிக்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘சென்னையில் ஒரு நாள்’. சரத்குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ்ராஜ், ராதிகா, ‘பூ ’ பார்வதி, மல்லிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கும் இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு சொல்லும் இந்த படம் அனைவரையும் கவரும், எங்களையும் பெருமைப்படுத்தும் என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார்.