ஆர்யா, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோர் நடித்த சேட்டை படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.
இதுவரை படப்பிடிப்பு நடந்த காட்சிகளை எடிட் செய்த பின் ஆர்யா மற்றும் படக்குழுவினர் பார்த்துள்ளனர்.
படத்தை ஆர்யா மிகவும் ரசித்துப் பார்த்துள்ளார். மிகவும் ஜாலியாக படம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அவை முடிந்த பின் ஏப்ரல் 1ம் தேதி படம் வெளிவரும் எனத் தெரிகிறது.
ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘டெல்லி பெல்லி’ படத்தின் ரீமேக்தான் ‘சேட்டை’. கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜப் வி மெட்’ படத்தை தமிழில் ‘கண்டேன் காதலை’ என்ற வெற்றிப்படமாக்கியவர்.
