கிளாமர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தற்போது இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘இசை’. புதுமுகம் சாவித்திரி நாயகியாக நடிக்கிறார்.
இப்படம் இரு இசையமைப்பாளர்களைப் பற்றிய படம். வளர்ந்து விட்ட ஒரு இசையமைப்பாளருக்கும், வளரத் துடிக்கும் இன்னொரு இசையமைப்பாளருக்கும் இடையேயான கதை.
இதில் வளரத் துடிக்கும் இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். வளர்ந்து விட்ட இசையமைப்பாளராக நடிக்க பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால், தற்போது பிரகாஷ்ராஜ், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து, படத்தை விட்டே வெளியேறி விட்டார்.
இளையராஜாவைப் பற்றிய பல ஆட்சேபகரமான காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. பிரகாஷ்ராஜ் , இளையராஜாவின் தீவிர ரசிகரும் ஆவார்.
ஆனால், இதற்கு எஸ்.ஜே. சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக இருப்பதால்தான் இப்படத்தில் நடிக்கவில்லை என்கிறார்.
அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒருவரை தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
உலகமே போற்றும் இசைஞானி இளையராஜாவை தரமற்ற முறையில் சித்தரித்து இந்த படத்தை அவர் எடுக்கலாம் என ஐயம் கோடம்பாக்கத்தில் நிலவுகிறது.
ஒரு நல்ல படம் எடுக்க எவ்வளவோ கதைகள், கருத்துக்கள் இருக்க, எஸ்.ஜே. சூர்யாவின் இந்த வேலை, வேண்டாத வேலை என்றே கருதப்படுகிறது.
‘இடுப்பை’ காட்டி படத்தை ஓட்டியவர்தானே ? அவரிடம் போயா நல்ல படத்தை எதிர்பாரக்க முடியும்…என்கிறார்கள் இளையராஜாவின் தீவிரமான ரசிகர்கள்.