இதுதான் ‘விஸ்வரூபம்’ கதை…

   viswaroopam  கமல்ஹாசன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் ‘விஸ்வரூபம்’.

இந்த படத்தின் கதையைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தீவிரவாதிகளைப் பற்றிய படம் இது, அமெரிக்க பின்னணியில் ஒரு ஆக்ஷன் படம் என சொல்லி வருகிறார்கள்.

தற்போது, இப் படத்தின் கதை என்ன என்பது நம் காதுகளுக்கும் எட்டியுள்ளது.

‘சில நாடுகளிலிருந்து திருடப்பட்ட அணுகுண்டுகளால் ஏற்படப் போகும் விபரீதத்தை நாயகன் கமல்ஹாசன் எப்படி தடுக்கிறார்’ என்பதுதான் கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

சங்கர் எசன் லாய் இசையமைக்க, ஆன்ட்ரியா, பூஜா குமார் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம்.

Read Previous

‘இசை’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை

Read Next

‘விஸ்வரூபம்’ வெளியீடு திடீர் தள்ளி வைப்பு…பொங்கலுக்கு இல்லை…

Most Popular