மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி நடிக்கும் படம் ‘கடல்’.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுத்து வருகிறார் மணிரத்னம். சென்ற மாதம் இப்படத்தின் இசையை வெளியிட்டார்கள். நேரடியாக கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
மணிரத்னமும், படம் சம்பந்தமான புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் கொடுத்து வருகிறார். இது வரை படம் சம்பந்தப்பட்ட அனைத்து நட்சத்திரங்களின் ஒரே புகைப்படம்தான் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சம்பந்தமாக எந்த விழாவையும் தமிழில் நடத்தாத இயக்குனர் மணிரத்னம், இன்று தெலுங்கு திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார்.
கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி, லட்சுமி மஞ்சு போன்றோர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.