ஜனவரி 25ல் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ் – கமல்ஹாசன் அறிவிப்பு

     kamal-and-theatre-ownersவரும் ஜனவரி 25ம் தேதியன்று ‘விஸ்வரூபம்’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் வெளியீட்டைப் பற்றி தான்தான் அறிவிக்க முடியும் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

தற்போது, அதிகாரபூர்வமாக அவரிடமிருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், “ விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்கு குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது. என் தொலை நோக்கை புரிந்து கொண்டு டிடிஎச் என்னும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்த சகோதரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.”

தனி மனிதனை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி”, என  கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read Previous

நேர்மையாக, நியாயமாக தொழில் செய்கிறேன் – கமல்ஹாசன்

Read Next

தெலுங்கில் மட்டும் விழா நடத்தும் மணிரத்னம்