நடிகர் கார்த்தி – ரஞ்சனி தம்பதியருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது.
சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக்கும் கோவையைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் 2011, ஜுலை 11ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
கார்த்தி நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.