பவர்ஸ்டாருக்கு ‘திருட்டு பட்டம்’ கட்டும் இயக்குனர் வெற்றிமாறன்

vetrimaaran‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற டைட்டில் சம்பந்தமாக இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு (?) வந்த பவர்ஸ்டாருக்கு திருட்டு பட்டம் கட்டியுள்ளார்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களின் இயக்குனர் வெற்றிமாறன். 2006ம் ஆண்டு  தனுஷை ஹீரோவாக வைத்து ‘தேசிய நெடுஞ்சாலை’  என்ற படத்தை ஆரம்பித்துள்ளார். சில காரணங்களுக்காக அந்த படம் அத்துடன் நின்று விட்டது. மீண்டும், அந்த டைட்டிலை பயன்படுத்த நினைத்த போது, அந்த டைட்டிலை பவர்ஸ்டார் பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதனால், அந்த டைட்டிலை வெற்றிமாறனால் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போயிற்று. இது சம்பந்தமாக வலைதளத்தில் அவருடைய கோபத்தை பதிவு செய்திருந்தார்.

powerstar‘புத்திசாலித்தனமான சொத்து திருட்டு’ என பவர்ஸ்டாரை நேரடியாகவே அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பொதுவாக, ஒரு திரைப்படத்தின் டைட்டிலை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலோ, பிலிம் சேம்பரிலோ பதிவு செய்ய வேண்டும். அந்த டைட்டில் ஒரு வருடத்திற்கு மட்டுமே இருக்கும். மீண்டும் புதுப்பிக்கத் தவறினால் முதலில் பதிவு செய்தவருக்கு அதற்கான உரிமை போய்விடும்.

இப்படித்தான் தமிழ் சினிமாவின் டைட்டில் பதிவு முறை இருந்து வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இந்த முறையே தவறு என்று சொல்கிறார். அப்படி புதுப்பிக்கத் தவறும் பட்சத்தில் வேறு ஒருவர் பதிவு செய்ய வந்தால், முதலில் பதிவு செய்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்கிறார்.

மேலும், ஒரு படத்தின் தலைப்பு என்பது இயக்குனரின் எண்ணத்தில் வருவது , கதைக்குப் பொருத்தமான தலைப்பை இயக்குனரே முடிவு செய்கிறார். இதனால், டைட்டில் பதிவு செய்யும் முறையை இயக்குனர்கள் சங்கத்தில் வைக்க வேண்டும். படம் ஆரம்பமாகும் போது டைட்டில் உரிமை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு மாற்றி விடலாம்.

ஒரு தயாரிப்பாளர் அந்த டைட்டிலை மீண்டும் புதுப்பிக்கலாம், அல்லது புதுப்பிக்காமலும் போகலாம், ஆனால் ஒரு இயக்குனருக்கு அந்த டைட்டிலை சொந்தம் கொண்டாட உரிமை இருக்கிறது. அவருக்கு அதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். இப்படி பல பிரச்சனைகள் ஒரே டைட்டிலுக்காக எழுகிறது. சரியான முறையில் இதை நிர்வகித்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்,” என்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

‘தேசிய நெடுஞ்சாலை’ என படத்துக்கு  பெயர் வைக்க  நினைத்த வெற்றிமாறன் இப்போது ‘உதயம் NH 4′ என பெயர் வைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் சொன்ன கருத்துப்படி இயக்குனர் சங்கம் சீக்கிரமே இந்த பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு இயக்குனர்களுக்கு நல்ல வழியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

Read Previous

‘கர்ப்பிணி’ வேடத்தில் நயன்தாரா…

Read Next

‘நய்யாண்டி’ ஆக மாறிய ‘சொட்டவாளக்குட்டி’