‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் புதிய படத்திற்கு ‘நய்யாண்டி’ என பெயரிடப்பட்டுள்ளது.
சற்குணம் இயக்கத்தில் தனுஷ் ஹீரேவாக நடிக்கும் இந்த படத்திற்கு முதலில் ‘சொட்டவாளக்குட்டி’ என பெயர் வைத்திருந்தார்கள்.
குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘நய்யாண்டி’.
இப்படத்திற்கான கதாநயாகி இன்னும் தேர்வாகவில்லை. சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.