“நீ ஓருவனை எவ்வளவு வேகமாக அடிக்கிறாய் என்பது முக்கியமல்ல அடிவாங்கியும் எழுந்து நிற்கிறாய் என்பதே முக்கியம்” உலக புகழ் பெற்ற சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ராக்கி திரைபடத்தின் மையகருத்து அது.
அக்கருத்துக்கு சான்றாக இருப்பது நடிகர் அஜித்குமார் என்றால் அது மிகையாகது.
தனது வாழ்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தடைகளை ஏணிப்படிகளாக மாற்றுவதும், வேதனையை சாதனையாக மாற்றுவதும் அவரது இயல்பென ஆகி விட்டது .
சமீபத்தில் மும்பையில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடந்த படப்பிடிப்பில் நடந்த ஒரு விபத்து மூலமாக படு காயம் அடைந்தார் அஜித். இப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியதை தொடர்ந்து தீவிர உடற் பயிற்சி மூலம் தன்னை மெருகேற்றி வருகிறார் .
இளம் பயிற்சியாளர் சிவா அஜீத்தின் காயத்தை மனதில் கொண்டு அதற்கேற்ற பிரத்தியேக உடற் பயிற்சி முறையை அவருக்கு அறிமுகப் படுத்தினார் .
விடா முயற்சிக்கு பெயர் பெற்ற அஜீத் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணம் தான் .