விஸ்வரூபம் படத்தை ஹைதராபாத்தில் திரையிடுவதற்கு இன்று நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை ஹைதராபாத் மாநகர காவல் துறை ஆணையர் அனுராக் சர்மா வெளியிட்டுள்ளார்.
இன்று மிலாது நபி திருநாளையொட்டி படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தடை குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும் விதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
ஹைதராபாத் தவிர ஆந்திராவின் மற்ற மாநிலங்களில் விஸ்வரூபம் வெளியாகியுள்ளது.
ரசிர்களிடம் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபம் படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் தாசரி நாராயணராவ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.