‘சேட்டை’யில் மதன் கார்க்கியின் 100வது பாடல்…

madhan-karkyண்டேன் காதலை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் மதன் கார்க்கி, கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன்.

எந்திரன் படத்தில் இடம்பெற்ற  ‘இரும்பிலே ஒரு இருதயம்…’ பாடல்தான் இவர் எழுதிய முதல் பாடல் என்றாலும் ‘கண்டேன் காதலை’ படம்தான் முதலில் வெளிவந்தது.  இந்த படத்தில் ‘ஓடோ ஓடோ ஓடோடிப் போறேன்…’ பாடலை எழுதினார்.

‘கண்டேன் காதலை’  படத்தை இயக்கிய கண்ணன் தற்போது இயக்கி வரும் ‘சேட்டை’ படத்தில்  100வது பாடலை எழுதியிருக்கிறார் காரக்கி. ‘அகலாதே…அகலாதே….’ என்ற பாடல்தான் இவர் எழுதியுள்ள 100வது பாடல்.

’சேட்டை’ படத்தின் இசை விழாவில் இதை குறிப்பிட்ட கார்க்கி ,“முதல் பட இயக்குனரின் படத்திலேயே 100வது பாடலை எழுதுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது,” என்றார்.

2 வருடத்தில் 100 பாடல்களை எழுதிய காரக்கி பல ஹிட் பாடல்களின் சொந்தக்காரர். இன்று வெளியாகும் ‘கடல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஏலே கீச்சான்…’, துப்பாக்கி – கூகுள் கூகுள்…, மாற்றான் – கால் முளைத்த பூவே….,  முகமூடி – வாய மூடி…, நான் ஈ – நானிதான் பேரு…., கோ – என்னமோ ஏதோ…., போன்ற பல ஹிட் பாடல்களை எழுதியவர்.

இளமையும், இனிமையும், அழகும் கலந்து எழுதுவதால் இன்றைய இளைஞர்களின் மனதில் இவருடைய பாடல்கள் ஹிட்டடிப்பதில் ஆச்சரியமில்லை…

Read Previous

விஸ்வரூபம் விவகாரம் – இன்று பேச்சு வார்த்தை ?

Read Next

50வது நாளில் ‘கும்கி’