‘டர்ட்டி பிக்சர்ஸ் ‘ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யா பாலன். தொடர்ந்து கஹானி போன்ற அற்புதமான படங்களில் நடித்து அவருக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டார்.
இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனன் இயக்கத்தில் விரைவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாகவிருக்கும் படம் ஒன்றில் வித்யா பாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல கர்நாடக இசைப் பாடகியும், மீரா படத்தில் நடித்த அந்தக் கால நடிகையுமான மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய படமாக அந்தப் படம் இருக்கும் என தெரிகிறது.
மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மத்தியில் ஆரம்பமாக உள்ளது. மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.