80, 90களின் காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்து விட்டார்.
செந்தில் இயக்கத்தில் சாந்தனு, பானு நடிக்கும் ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் கவுண்டமணி.
கடைசியாக சத்யராஜ் ஹீரோவாக நடித்த தங்கம், பொள்ளாச்சி மாப்பிள்ளை படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏறக்குறைய மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார்.
இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம் கவுண்டமணியின் நகைச்சுவை பாணியைத்தான் பின்பற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அந்த அளவிற்கு கடந்த 30 வருடங்களாக தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் கவுண்டமணி.
வாங்க ஸார் வாங்க….உங்க ‘கவுன்டர்’ டயலாக்கை இந்தக் கால யூத்துகளுக்கும் கொஞ்சம் காட்டுங்க ஸார்….