பிரசாந்த் படம் இயக்கவில்லை – ராஜமௌலி

mambattiyan‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலம் அடைந்தவர் தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி.

தற்போது பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கும் ‘பாகுபலி’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார்.

இதனிடையே ‘பாகுபலி’ படம் முடிந்ததும் ராஜமௌலி பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.

பிரசாந்த் கடைசியாக அவருடைய அப்பா இயக்கத்தில் ‘மம்பட்டியான் ‘படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக கலைஞரின் கதை, வசனத்தில் உருவான ‘பொன்னர் சங்கர்’ படத்திலும் நடித்திருந்தார்.

பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தை ராஜமௌலி இயக்கப் போவதாக வந்த செய்தியை ராஜமௌலி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,  ”பாகுபலி படத்திற்குப் பின் பிரசாந்த் நடிக்கும் படத்தை நான் இயக்கப் போவதாக வந்த தகவல் தவறானது. எங்கிருந்து இந்த வதந்தி கிளம்பியது என்பது ஆச்சரியமா உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

படம் மேல படம்தான் ‘பவர்ஸ்டார்’ கையிலே….

Read Next

‘கடல்’ வியாபாரம் – எங்களுக்கு தொடர்பில்லை – மெட்ராஸ் டாக்கீஸ்