சித்தார்த்துடன் காதல் இல்லை – சமந்தா மறுப்பு

siddarth samantha 2‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா.

இருவருமே தற்போது தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள்.

சித்தார்த் தற்போது ‘உதயம், தீயா வேலை செய்யணும் குமாரு’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சமந்தா தானும் ஒருவரைக் காதலிப்பதாகச் சொன்னார், ஆனார் அவர் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார்.

இதனிடையே சித்தார்த், சமந்தா இருவரும் இணைந்து நடித்த தெலுங்குப் படமான ‘ஜபர்தஸ்த்’ படத்தின் இசை வெளியீடு சென்ற வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தவர்கள், இருவரும் காதலர்கள் என முடிவுக்கு வந்து மீடியாக்களிலும் இந்த செய்தி பரவியது.

ஆனால், சமந்தா இந்த செய்தியை மறுத்துள்ளார். சித்தார்த்துடன் தனக்கு தொழில் ரீதியாக மட்டுமே நட்பு இருப்பதாகவும், அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மீடியாக்கள் வழக்கம் போல் பரபரப்புக்காக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.

ம்ம்ம்ம், பார்ப்போம், காதலர் தினத்தில் நாமும் காதல் பற்றிய ஒரு செய்தியை எழுதியாகிவிட்டது.

Read Previous

மீண்டும் நடிக்க வந்தார் கோபிகா…

Read Next

விஜய் சிறப்பித்த ‘வத்திக்குச்சி’ இசை வெளியீடு