நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ ரீமேக் ஏப்ரலில் ஆரம்பம்

nayantharaநயன்தாரா தற்போது அஜித் ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படம், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இது கதிர்வேலன் காதல் மற்றும் ஆர்யாவுடன் ராஜாராணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் , ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமான கஹானி படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.

காணாமல் போன கணவனைத் தேடிக் கண்டு பிடிக்க முயலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கதைதான் கஹானியாக வெளிவந்தது . கர்ப்பிணிப் பெண்ணாக நடித்த வித்யாபாலனுக்கு இந்த படம் நல்ல பெயரையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

அவர் நடித்த கதாபாத்திரத்தில்தான் நயன்தாரா நடிக்க உள்ளார்.

Read Previous

சென்னை பாஷை பேசும் சரண்யா…

Read Next

அனுஷ்கா நடிக்கும் ‘ராணி ருத்ரமாதேவி’ ஆரம்பம்