அனுஷ்கா நடிக்கும் ‘ராணி ருத்ரமாதேவி’ ஆரம்பம்

rani-rudrama-devi-poojaகுணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, ராணா நடிக்கும் ராணி ருத்ரமாதேவி படத்தின் ஷுட்டிங் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் உள்ள ஆயிரம் கால் கோயிலில் இப்படத்தின்  பூஜை நடைபெற்றது.

இயக்குனர் குணசேகர், ராணா, அனுஷ்கா ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

மிகப் பெரும் பொருட்செலவில் இந்த படம் தயாராக உள்ளது. பல வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தில் பணியாற்ற உள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராயகிறது.

Read Previous

நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ ரீமேக் ஏப்ரலில் ஆரம்பம்

Read Next

வன யுத்தம் – விமர்சனம்