‘அமீரின் ஆதி பகவன்’ படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளது . ‘ ஏ ‘சர்டிபிகேட் என்றாலே அது ஆபாசக் காட்சிகள் அதிகம் இருப்பதால்தான் தருகிறார்கள் என்ற பொதுவான பார்வை உண்டு.
ஆனால், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் இருந்தாலும், கதையே வன்முறை சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், அந்த படங்களுக்கு ‘ஏ’ சர்டிபிகேட் தருவது வழக்கம். அந்த விதத்தில்தான் இந்த படத்திற்கும் கொடுத்திருக்கலாம் என தெரிகிறது.
இது குறித்து ஜெயம் ரவி கூறுகையில், ” நான் அமீரின் ஆதி பகவன் படத்தைப் பார்த்து விட்டேன். படத்தில் ஆபாச காட்சிகள் எதுவுமில்லை. ஒரு வேளை மாஃபியா கும்பலைப் பற்றிய படம் என்பதால் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். விஸ்வரூபம், கடல் படங்களின் பிரச்சனைகளுக்குப் பிறகு சென்சார் போர்டு இப்படி செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன், ”என்று கூறியுள்ளார்.