தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
அந்த படம் விமர்சகர்களால் நன்றாக பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்து நடிக்கப் போகும் படங்களின் கதைகளை தீவிரமாக கேட்டு வந்தார் விஜய் ஆண்டனி.
தற்போது ‘வாய்மை’ படத்தை இயக்கி வரும் செந்தில் குமார் சொன்ன கதை விஜய் ஆண்டனிக்கு பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்திற்கு ‘திருடன்’ என பெயரிட்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
விஜய் ஆண்டனி ஜோடியாக முன்னணி ஹீரோயின் ஒருவர் நடிக்கப் போகிறார். விரைவில் முறையான அறிவிப்பு வெளி வர உள்ளது.