ரஜினி படம் இயக்கவில்லை – கே.வி. ஆனந்த்

kv-anandசூர்யா நடித்த ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களின் இயக்குனரான கே.வி. ஆனந்த் , ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக இன்று பல இணையதளங்களில் பரபரப்பாக செய்தி வெளியாகியது.

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கப் போகும் படத்தை கே.வி. ஆனந்த் இயக்கப் போவதாகவும், ரஜினிகாந்த் அதில் நடிக்கப் போவதாகவும், படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் செய்தி வெளியானது.

ஆனால், மேற்கண்ட செய்தியை வெறும் வதந்திதான் என மறுத்துள்ளார் கே.வி. ஆனந்த்.

எப்போதுமே ரஜினி படம் என்றாலே இப்படி ஒரு வதந்தி செய்தியாக கிளம்புவது வாடிக்கைதான்.

ரஜினி தற்போது நடித்து வரும் ‘கோச்சடையான்’ ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவர உள்ளது.  அதன் பிறகே அவர் நடிக்கப் போகும் படம் எது என்று தெரிய வரும்.

அது வரை இப்படி பல வதந்திகளை பலர் செய்திகளாக உருவாக்கி விடுவது வழக்கம்தான்.

Read Previous

வெங்கட் பிரபுக்கு பரிசளித்த கார்த்தி…

Read Next

‘தலைவா’ படத்தில் அடுத்த நாயகி…