‘துப்பாக்கி’ படம் விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணிக்கு மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
100 நாட்களைக் கடந்தும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி விட்டது. எனவே, மீண்டும் இந்த கூட்டணி இணையுமா என்ற கேள்வி எழுந்தது.
சமீபத்தில் கூட ‘வத்திக்குச்சி’ படத்தின் இசை வெளியீட்டில் தயாரிப்பாளர் எஸ். தாணு இந்த கேள்விக்கு இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று கூறியிருந்தார்.
விஜய் தற்போது ‘தலைவா’ படத்தில நடித்து வருகிறார். அடுத்து ‘ஜில்லா’ படத்தில் நடிக்கப் போகிறார். இந்த இரு படங்களும் முடிந்ததும், அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது.
அதற்குள், ஏ.ஆர். முருகதாஸ் ‘துப்பாக்கி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் முடித்து விடுவார்.
அநேகமா, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் விதத்தில் தயாராகலாம்.