லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா…

singam-1சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ படத்தி நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு அவர் நடிக்கப் போவது யாருடைய படத்தில் என சில நாட்களாக பலத்த விவாதம் நடைபெற்று வந்தது.

இப்போது சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் தோல்வியால் துவண்டு போயிருந்து கௌதம் மேனன்,  சூர்யாவை சந்தித்து அடுத்த படத்தை இயக்கப் போவது பற்றி பேசியதாகத் தெரிகிறது.

இயக்குனர் – நடிகர் சசிகுமாரும் சூர்யாவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இயக்குனர் லிங்குசாமி படத்தில்தான் என உறுதியாகியுள்ளது. இந்த படம் முடியும் சமயத்தில்தான் இதற்கடுத்து யார் படத்தில் நடிக்கலாம் என்பதை சூர்யா முடிவு செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லிங்குசாமி இயக்கப் போகும் படத்தில் சூர்யா – சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

 

Read Previous

கமலுக்கு வீடு கிடைக்குமா ?

Read Next

தமிழுக்கு வரும் அசின்…