‘கடல்’ அடுத்து ‘எல்லை’ – மீண்டும் வருகிறார் மணிரத்னம்

maniratnamதலைப்பைப் பார்த்ததும் மணிரத்னத்தின் அடுத்த படத்தின் தலைப்பு ‘எல்லை’ (அட..டைட்டில் நல்லாத்தான் இருக்கு)  என நினைத்து விட வேண்டாம்.

அடுத்ததாக மணிரத்னம் , ஒரு காதல் கதையை உருவாக்கி வருகிறார். அது இந்திய –  பாகிஸ்தான் எல்லைப் பிரிவின் போது நடப்பதாக அமைக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்போதுமே ஏதாவது பிரச்சனையை மையமாக வைத்து கதை பண்ணுவதை வழக்கமாக வைத்திருப்பவர் மணிரத்னம். இந்த புதிய படத்திற்காக ‘ரங் தே பசந்தி’ ஹிந்திப் படத்தின் கதையை எழுதிய ரென்ஸில் டிசௌசா கதையை எழுதி வருவதாகவும் தெரிகிறது.

இந்த புதிய படத்தை உருவாக்குவதற்கு முன் மணிரத்னம் அநேகமாக நீண்ட நாட்களை கதையை உருவாக்க எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும், ‘கடல்’ படத்தின் தோல்வி எந்த விதத்திலும் இந்த புதிய படத்தை பாதிக்காத அளவிலும் உருவாக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

‘கடல்ல விட்டத எல்லையிலயாவது பிடிங்க ஸார்….’.

Read Previous

தமிழுக்கு வரும் அசின்…

Read Next

‘குடும்ப குத்து விளக்கு’ நயன்தாரா