நயன்தாரா தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவரை துளி கூட கிளாமராக காட்டப் போவதில்லையாம் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன்.
நயன்தாரா அறிமுகமான ‘ஐயா’ படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில்தான் நடித்தார். போகப் போக கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து அதிகமான ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் கூட தெலுங்கில் ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படத்தில் சீதாவாக நடித்து பலரையும் கவர்ந்தார்.
கதைப்படி நயன்தாரா கோயம்புத்தூரைச் சேர்ந்த பவித்ரா என்ற நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக படத்தில் நடிப்பதால் அவரை ரொம்பவும் மாடர்ன் ஆக காட்ட முடியாதென சொல்கிறார் இயக்குனர்.
தற்போது சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பு, விரைவில் கோயம்புத்தூரிலும் நடக்கப் போகிறது.