நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி இருவருக்கும் எதிராக திரைப்படங்களில் கண்ணியமற்ற உடைகள் அணிவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக இந்த வழக்கை சமூக சேவகரான சுப்புதா என்பவர் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு ஆந்திர திரையுலகில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவர் மீது மட்டும் வழக்கு தொடுக்க என்ன காரணம் ? , இவர்களிருவர் மட்டுமா கிளாமரான உடையணிந்து நடிக்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சமீப காலமாக திரையுலகினர் மீது ஏதாவது ஒரு பரபரப்புக்காக வழக்கு தொடர்வது வாடிக்கையாகிவிட்டதாகவே திரையுலகினர் கருதுகிறார்கள்.